2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

தீ விபத்தில் மூன்று வீடுகள் பாதிப்பு

Kogilavani   / 2017 மார்ச் 30 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

புசல்லாவை, சோகம நடுப்பிரிவு தோட்டத்தில், புதன்கிழமை இரவு  ஏற்பட்ட தீ விபத்தில்,  மூன்று வீடுகள் முற்றாக எரிந்துள்ளதாக, புசல்லாவை பொலிஸார் தெரிவித்தனர்.

லயன் குடியிருப்பிலுள்ள மூன்று வீடுகளே, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

இத் தீ விபத்தினால், மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  இவர்கள், உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கானக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புசல்லாவை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .