2025 மே 14, புதன்கிழமை

தகாத உறவு கொண்டவளுக்கு மதுகொடுத்து துஷ்பிரயோகம்

Freelancer   / 2023 மார்ச் 13 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணத்திலக்க

திருமணமான பெண்ணொருவருடன் கூடாத உறவைக் கொண்டிருந்த நபரொருவர், அந்தப் பெண்ணுக்கு மதுபானம் கொடுத்து பாலியல் துஷ்பிர​யோகம் செய்துள்ளார். இந்த சம்பவம், தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

22 வயதான பெண்ணையே அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபர், கடந்த 7ஆம் திகதியன்று, கடுமையாக தாக்கி, பலவந்தமாக மதுபானம் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பெண்ணின் கணவர், சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்தே, அப்பெண்ணுக்கும் அயலில் வசிப்பவருக்கும் இடையில்​ தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த தொடர்பு காலபோக்கில் தகாத உறவாக மாறியுள்ளது.

சம்பவதினம் தனது இரண்டு நண்பர்களுடன் மதுபானம் அருந்திய நபர், அந்தப் பெண்ணை உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கியதுடன், மதுபானத்தையும் பருக வைத்து, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், ஹம்பாந்​தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்தே தப்பியோடிவிட்டார் எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .