Janu / 2025 ஜூலை 14 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை, தெய்யன்னேவெலவில் உள்ள ஒரு வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை குளியலறை ஜன்னல் வழியாக நுழைந்த ஒரு இளைஞன், வீட்டு உரிமையாளரான பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி 25,000 ரூபாய் பெறுமதியுடைய நகைகளை அபகரித்துச் சென்றதாகவும், சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்திற்கு முகம் கொடுத்த 24 வயது பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும் குறித்த பெண்ணும் அவரது 4 வயது குழந்தையும் மட்டுமே வீட்டில் இருக்கின்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சத்தம் கேட்டு எழுந்த போது, சந்தேக நபர் கையில் கத்தியுடன் தன்னை நோக்கி வந்து, தான் அணிந்திருந்த, 25,000 ரூபாய் பெறுமதியுடைய இரண்டு காதணிகள், தங்கச் சங்கிலி மற்றும் இரண்டு மோதிரங்களைத் அபகரித்துச் சென்றுவிட்டதாக அந்தப் பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 வயது சந்தேக நபர் பதுளை, அமுனுவெல்பிடியைச் சேர்ந்தவர் என்றும், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் திருடப்பட்ட நகைகள் கண்டுபிடிக்க விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாலித்த ஆரியவங்ச
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago