Freelancer / 2023 மார்ச் 12 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார இலங்கதிலக்க

ஓட்டோவொன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்ற பயணியொருவர் தவறவிட்ட பணம் மற்றும் தங்க கைச்சங்கிலி ஆகியவற்றை உரியவரிடமே அந்த ஓட்டோ சாரதி கையளித்துள்ள சம்பவமொன்று மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா நகரில் இருந்து, மொக்கா தோட்டத்துக்கு மார்ச் 10ஆம் திகதியன்று வாடகைக்கு ஓட்டோவை செலுத்திச் சென்ற சாரதி, மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த போது ஓட்டோவில் இருந்து தங்க கைச்சங்கிலி, 540 ரூபாய் பணம், தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை கண்டெடுத்துள்ளார்.
அவை மொக்கா தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.சிகாமணி என்பவருடையது என அடையாளம் காணப்பட்டது. அவற்றை மஸ்கெலியா பொலிஸாரின் ஊடாக, ஓட்டோ சாரதியான மஸ்கெலியா க்ளேன்டின் தோட்டத்தில் வசிக்கும் சுப்ரமணியம் சந்திரமோகன் என்பவரிடம் கையளித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago