Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி ஏற்றப்படுவது கட்டாயமென அரசாங்கம் அறிவித்து வருகின்ற நிலையில், தடுப்பூசி ஏற்றாமல் தாம் புறக்கணிக்கப்படுவதாக மடக்கும்புர மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர தோட்டத்தில் இதுவரை முதலாவது தடுப்பூசி கூட ஏற்றப்படாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் மலையகத்தில் பெரும்பாலான பகுதிகளில் முதல்கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டு,
இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டு விட்டது. ஆனால் முதல் தடுப்பூசி கூட ஏற்றப்படாத
நிலையில் தினம் தினம் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக மடக்கும்புர
தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
“மேலும் மலையக தோட்டப்புறங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,
தடுப்பூசி ஏற்றாமல் தோட்டத்தொழிலுக்கு கூட செல்வதற்கு அச்சமாக உள்ளது. கடந்தவாரம்
தடுப்பூசி ஏற்றப்படுவதாக கூறி வரவழைக்கப்பட்டு ஏமாற்றத்துடனேயே திரும்பினோம்.எனவே,
இனியாவது எம்மை புறக்கணிக்காமல் விரைந்து தடுப்பூசிகளை ஏற்றுமாறு மடக்கும்புர மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எனினும் கடந்தவாரம் தடுப்பூசி பற்றாக்குறையால் செலுத்தமுடியாமல் போய்விட்டது.மறுபடி
ஏற்றுவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை.அவ்வாறு ஏற்றும் பட்சத்தில் முன்னுரிமையளித்து மடக்கும்புர மக்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்படும் என இப்பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.
29 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
4 hours ago