2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தண்டுகலா பகுதி முடக்கம்

Gavitha   / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன், நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தண்டுகலா தோட்டத்தின் கீழ்ப்பிரிவில், மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தண்டுகலா பகுதி முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து எவரும் வெளியேறமுடியாது என்றும் வெளியிடங்களில் இருந்து அங்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன், வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆக்ரோயா பகுதியிலும் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 தண்டுகலா தோட்டத்தில் ஏற்கனவே ஐந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (05) மாலை வெளியாகியபோதே, 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X