2025 ஜூலை 02, புதன்கிழமை

தந்தையின் இடத்துக்கு மகனை நியமிக்க கோரிக்கை

Kogilavani   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எம்.செல்வராஜா

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு,  ஊவா மாகாண சபை உறுப்பினர் ருத்திர தீபனை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சங்க தலைமை பீடத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சங்க நிர்வாக கூட்டம் சங்கத்தின் தலைவரும் பிரதியமைச்சருமான ரவிந்திர சமரவீர தலைமையில், இராஜகிரியவிலுள்ள தொழிலாளர் இல்லத்தில் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் சங்கத்தின்  பொதுச் செயலாளர் தெரிவு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் கடமையாற்றி வந்தார். இந்நிலையில் அவரது மறைவையடுத்து அவ்விடத்துக்கு வெற்றிடம் ஏற்பட்டது. இந்நிலையில் அமரர் கே.வேலாயுதத்தை கௌரவப்படுத்தும் வகையில் அவரது மகனான வே.ருத்திரதீபனுக்கு இ.தே.தோ.தொ.சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .