2025 மே 08, வியாழக்கிழமை

தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் குடும்பங்களுக்கு உதவ அரச கிராமிய கூட்டுச் செயலணி

Gavitha   / 2020 நவம்பர் 05 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படும் குடும்பங்கள், உறவினர்களின் நலன்களைப் பேணுவதற்காக, சப்ரகமுவ மாகாணத்தின் கிராம சேவையாளர்  பிரிவுகளை மையப்படுத்திய செயணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர், வைத்தியப் பரிசோதனைகளுக்காக, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும்போது, அவர்களில் தங்கிவாழ்வோர், நிர்க்கதிக்கு உள்ளாகி வருவதால், இந்தச் செயலணி அமைக்கப்பட்டு, உதவிக பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான கலந்துரையாடல், இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில், நேற்று (04) நடைபெற்ற கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு கமிட்டிக் கூட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்டது.

இதன் பிரகாரம், உரிய பிரதேசங்களின் கிராம சேவகர், பொதுசுகாதார உத்தியோகத்தர் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர், கிராமிய அரசியல், பொது சமூக சேவைத் தொண்டர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய செயலணிகள் அமைக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X