Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Gavitha / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், விதிமுறைகளையும் சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றாவிடின், அப்பகுதிக்கான தனிமைப்படுத்தல் மேலும் நீடிக்கப்படும் என, பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தெரிவித்துள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள யாரும், அப்பிரதேசத்தை விட்டு வெளியில் செல்லமுடியாது என்றும் அவ்வாறு செல்பவர்களுக்கு எதிராக, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீட் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில், 9 பொலிஸ் பிரிவுகளின் கீழுள்ள பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் நாடளாவிய ரீதியில் 32 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள எவரும், தத்தமது வீடுகளில் இருந்து வெளியேற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
“சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள். பிசிஆர் பரிசோதனைக்கு மாதிரி கோரினால் ஒத்துழைப்பு வழங்குங்கள். சுகாதார நடைமுறைகளை எதிர்க்கவேண்டாம்” என்று அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, சட்டம் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றினால், அந்தந்தப் பகுதிகளில் அமுல்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் சட்டம், விரைவில் நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
7 hours ago
9 hours ago