2026 ஜனவரி 21, புதன்கிழமை

‘தனியாருக்குத் தோட்டக் காணியை வழங்காதே‘

Ilango Bharathy   / 2021 ஜூலை 06 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருள்ஷான்

யட்டியாந்தோட்டை- நாகஸ்தன்ன தோட்டத்தின் 300 ஏக்கர் காணியை தனியாருக்கு
சட்டவிரோதமாக வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,நேற்றைய தினம் (5) நாகஸ்தன்ன தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

நாவலப்பிட்டி- யட்டியாந்தோட்டை பிரதான வீதியை மறித்தே இவர்கள் இந்த எதிர்ப்பு
நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன் போது ‘அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபையால் நிர்வகிக்கப்படும் குறித்த தோட்டத்தின் காணிகளை தனியாருக்கு வழங்காமல், இத்தோட்டத்திலுள்ள மக்களுக்கே பகிர்ந்தளிக்குமாறும் அதன்மூலம் விவசாயம் செய்து, தோட்ட நிர்வாகத்துக்கான குத்தகைப் பணத்தை தாமே செலுத்துவதாகவும் ‘ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X