2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தனியார் விலங்கு பண்ணைக்கு எதிர்ப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள நாலவலப்பிட்டி நாகஸ்தென்ன தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் அந்தத் தோட்ட முகாமையாளருக்கு எதிராக, கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு, திங்கட்கிழமை (03) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தத் தோட்டத்தின் முகாமையாளரால், மரக்கறிகளை பயிர்செய்வதற்காக, தொழிலாளர்களுக்கு ஒரு ஏக்கர் வீதத்தில் தற்காலிகமாக காணிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த காணிகளை மீளவும் பொறுப்பேற்றுக்கொண்ட முகாமையாளர், அந்த காணிகளை தனியார் விலங்கு பண்ணைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த காணியில் மரக்கறிகளை பயிர்ச்செய்து, மேலதிக வருமானத்தை தாங்கள் பெற்றுக்​கொண்டோம். அவ்வாறான காணிகளை மீளவும் தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றுக்கொண்டமையால் பொருளாதார ரீதியில் தாங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் நாவலப்பிட்டியவில் செயற்பாடும் சிவில் ​அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்துகொண்டனர்.

அந்தத் தோட்டத்தில் 1,600 ஏக்கர் காணி  உள்ளது. அதில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய இடங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.  ஏஞ்சிய காணியை தனியார் விலங்கு பண்ணை​க்கு வழங்குவதாயின் தாங்கள் எவ்விதமான எதிர்ப்புகளையும் தெரிவிக்கமாட்டோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பேரணியாகச் சென்று மகஜரையும் கையளித்தனர். அத்துடன், காணிகளை தனியார் விலங்கு பண்ணைக்கு வழங்குவதற்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அவற்றுக்கு எதிராக பாரிய நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வோம் என்றும் எச்சரித்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X