2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தன்னுயிரை மாய்த்த லபுக்கலை சிறுவன்

Janu   / 2023 ஜூன் 08 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன்,  டி.சந்ரு 

நுவரெலியா, லபுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதான சிறுவன் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதிலும், இடையிலேயே மரணித்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.  

நுவரெலியா லபுக்கலை கீழ் பிரிவில் வசிக்கும் நடேசன் ஆக்காஷ்ராஜ் (வயது-14) என்ற சிறுவனே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக நிலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X