R.Maheshwary / 2022 ஜூன் 16 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்து தானே விலகிக் கொண்டதாகவும் தன்னை யாரும் விலக்கவில்லை என்றும் நுவரெலியா பிரதேசசபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், வேலு யோகராஜ் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ள நிலையில், சில ஊடகங்களில் வேலு யோகராஜ் விலக்கப்பட்டார் என இரு மாறுபட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே இந்த விடயம் தொடர்பில், வேலு யோகராஜியிடம் வினவியப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேனை, கந்தப்பளையில் சர்ச்சைக்குள்ளான காணி விவகாரம் தொடர்பில் உரிய ஆவணங்கள் தொடர்பில் காங்கிரஸின் ஒழுக்காற்று குழு நேற்று (15) விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
கந்தப்பளை காணி விவகாரம் தொடர்பில் வேலு யோகராஜியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையானது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒழுக்காற்று குழுவினால் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக வேலு யோகராஜிக்கு கடிதமூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago