Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 14 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
தபால் திணைக்கள ஊழியர்கள் முகங்கொடுக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 'தபால் திணைக்கள ஊழியர்கள் முகங்கொடுக்கம் தொழிற்சார் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை உடனடியாக தீர்ப்பதற்கு, தபால் ஊழியர்களது தொழிற் சங்கங்களுடன் நிரந்தர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன். இதன்படி பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஏனைய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
கடந்த வரவு-செலவு திட்டத்தின் ஊடாக தபாற்திணைக்களத்துக்காக ஒதுக்கப்பட்ட 1,500 மில்லியன் ரூபாய் பணம் கிடைக்க வில்லை. அப்பணத்தை மீளப்பெற்று பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Jul 2025