Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஏப்ரல் 18 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
சிறைச்சாலைகள் திணைக்களத்துக்குச் சொந்தமான பதுளை மாவட்டத்தின் தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தல்தென சீர்திருத்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நோன்பு நடவடிக்கைகளுக்காக தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த போது அந்த அறையில் இருந்த இரும்பு கம்பியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து திங்கட்கிழமை (17) தப்பி சென்றிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதிகள் வழங்கிய தகவலின்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, தல்தென சிறைச்சாலையின் புதிய பண்ணைக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (18) காலை இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தகெட்டிய பொலிஸார் கிராம மக்களின் உதவியுடன் மேற்கொண்ட தேடுதலின் போது கந்தகெட்டிய பதுலுஓயாவிற்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு அருகில் மேலும் நான்கு இளைஞர்கள் திங்கட்கிழமை (17) மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (18) அதிகாலை 4 மணியளவில் கந்தகெட்டிய கிரிவெஹெர பதுலுஓயாவிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது எஞ்சிய மூன்று இளைஞர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
23, 24, 25, 26 வயதுடைய இந்த இளைஞர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றவர்கள் என்றும் சீர்திருத்தத்தின் பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த சீர்திருத்த நிலையத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 376 இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் 48 உத்தியோகத்தர்கள் மட்டுமே இங்கு கடமையாற்றுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
4 hours ago
4 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
19 Jul 2025