Editorial / 2019 மே 25 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவணம் செய்ய வேண்டும் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டனில், இன்று (25) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு, சரியா பிடையா என்பதை விட, இது ஜனாதிபதியின் மனிதாபிமானத்தையே எடுத்துக் காட்டுவதாகவும் இதேபோன்று, தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படல் வேண்டும் என்றும் கூறினர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து, ஞானசார தேரர் விடுதலை செய்யப்படல் வேண்டும் என்று, பெரும்பான்மை மக்கள் கோரிக்கை விடுத்திருந்ததன் பின்னரே, அவர் விடுதலை செய்யப்பட்டார் என்றும் அவர் கூறினார்.
4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago