Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா- குயின்ஸ்லேண்ட் பிரிவில், கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி 20 குடியிருப்புகளைக் கொண்ட லயக்குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயால் நிர்க்கத்திக்குள்ளானவர்களுக்கு, இதுவரை நிரந்தர வீடுகள் அமைத்துகொடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
பாதிக்கப்பட்ட 20 குடியிருப்புகளில் வசித்த 83 பேரையும் சேர்ந்த மக்களை தோட்ட நிர்வாகம் ,
குயின்ஸ்லேன்ட் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைத்ததுடன், சுமார் இரண்டு வாரம்
தங்கிய பின்னர் பாடசாலை மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டிய நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தீப்பரவலுக்கு உள்ளான தமது குடியிருப்புகளுக்கே மீண்டும் திரும்பி வந்து வசிக்கத்தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு பழைய குடியிருப்புக்கே திரும்பி வந்தவர்களுக்கு, தோட்ட நிர்வாகம் டிரஸ்ட்
நிறுவத்தின் கீழ், 30 கூரைத்தகடுகள், பலகைகள், மூங்கில் மரங்கள் என்பவற்றை
வழங்கியுள்ளதுடன், அவற்றைப் பயன்படுத்தி, தீயால் எரிந்த குடியிருப்பு பகுதிகளிலேயே
குடிசைகள் அமைத்து வசிக்குமாறு தோட்ட நிர்வாகம் பணித்துள்ளது.
இதற்கமைய கடந்த 6 மாதங்களாக குறித்த தற்காலிக குடிசைகளில் பலவித அவலங்களுடன்
இவர்கள் வாழ்ந்து வருவதுடன், இவர்களுகான நிரந்தர குடியிருப்புகளை அமைத்துக்கொடுக்க
எவரும் முன்வரவில்லை.
எனினும் தற்காலிக தீர்வாகவே இந்த ஏற்பாடை செய்துகொடுத்தாக தோட்ட நிர்வாகம்
தெரிவித்துள்ள நிலையில், தமக்கான தனிவீட்டுத் திட்டம் ஒன்றை அமைத்து கொடுக்க
சம்பந்தபட்டவர்கள் முன்வரவேண்டும் என்றும் இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .