Kogilavani / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.ஆ.கோகிலவாணி
இறம்பொடை, கையிறுக்கட்டி தோட்டத்தில் கடந்த 25 ஆம் திகதியன்று ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 2,280,000 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
'மேற்படி தோட்டத்தில் மண்சரிவு காரணமாக நேரடியாக 5 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதுடன் கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்புரைக்கு அமைய 19 குடும்பங்கள் தமது குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களது நிலையை கருத்திற் கொண்டு ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 12 இலட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் 19 குடும்பங்களுக்கும் வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளன.
3 மாதங்களுக்குள் நிறைவு செய்யும் வகையில் இவ்வீடுகளுக்கான கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நிர்மாணப் பணியின் இறுதியில் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கும் வீடுகள் இலவசமாக வழங்கப்படும்' என்றார்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதல்கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வந்த தனி வீடமைப்புத் திட்டமானது எதிர்வரும் 11 ஆம் திகதியிலிருந்து மக்களுக்கு கட்டம்;கட்டமாக கையளிக்கப்பட்டவுள்ளது.
கண்டி, பதுளை, மாத்தளை, இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய பிரதேங்களில் இவ்வீடமைப்புத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேற்படி பிரதேங்களில் இதுவரை 376 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சால் 50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது' என்றும் அவர் கூறினார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026