Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 10 , மு.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாய் சம்பளம் பெற்றுத்தருவதாக ஏமாற்றிய மலையக தலைமைகளின் பிற்போக்கான இராஜதந்திரம் தொழிலாளர்களின் வயிற்றிலடித்துவிட்டது என்று சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் மாத்தளை மாவட்ட செயலாளர் செ.மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதனை சாதமாக்கிக் கொண்ட தலைமைகள் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுடைய வாக்கு வங்கிகளை நிரப்பிக்கொண்டனர். இந்நிலையில், மாபெரும் போராட்டத்தின் மூலமே 1,000 ரூபாய் நாள் சம்பளத்தை வென்றெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர், அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியன்று கூட்டொப்பந்தம் காலாவதியானது. அதன் பின்னர் வெற்றுப்போராட்டங்களை நடத்தினர். 1,000 ரூபாய் நாள் சம்பளத்தை பெற்றுத்தருவோமென அறிக்கை மழையையும் பொழிந்தனர்.
கூட்டொப்பந்தம் காலாவதியானதன் பின்னர், நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதனால் இது சூடு பிடித்திருந்தது. மஹிந்த வென்றால் 1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுத்தருவதாக ஆறுமுகம் தொண்டமான் குறிப்பிட்டிருந்தார்.
1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது ஆறுமுகன் தொண்டமானின் பொறுப்பாகும் என்று பி.திகாம்பரம் வெற்று கோசம் போட்டார்.
இறுதியில் நல்லாட்சிக்கான கூட்டணி, இந்தத் தேர்தலில் வென்றால் 1,000 ரூபாவை பெற்றுத்தருவோம் என்றனர். மொத்தத்தில் தேர்தல் முடிந்தும் எதுவுமே இதுவரையில் நடக்கவில்லை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை முதலாளிமார் சம்மேளனத்துக்கு சார்பாக தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தல் காலத்திலோ முடித்திருந்தால் வாக்குகளிப்பு சதவீதம் கணிசமாக குறைந்திருக்கும்.
இது மலையக அரசியல் அரங்கில் நாடாளுமன்றத் தேர்தலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இதனை நன்கு அறிந்து கொண்ட மலையக தொழிற்சங்க தலைமைகள் தேர்தல் நிறைவடைந்ததும் சம்பளத்தை பெற்றுத்தருவோம் என்ற வாக்குறுதியுடன் பிற்போக்கு ராஜ தந்திரத்தால் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தனர்.
முதலாளிமார் சார்பாகவே தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் நடந்து கொள்வதை தொழிலாளர் சக்திகள் உணர முன்வர வேண்டுமென்பதோடு பிற்போக்கு தொழிற்சங்கங்களை நிராகரித்து 1,000ரூபாய் நாள் சம்பளத்தை வென்றெடுப்பதற்காக போராட்டங்களை நடத்த தொழிலாளர்கள் முன்வரவேண்டும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
2 hours ago