Kogilavani / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ், கு.புஸ்பராஜ்
தலவாக்கலை-நகரசபை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பொது வியாபாரக் கடைத் தொகுதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கைளை மேற்கொள்வதாக நகரசபையின் செயலாளர் எச்.எம்.ஜி.அஜித் புஷ்பகுமார தெரிவித்தார்.
'இப்பகுதி வர்த்தகர்கள் முறையாக நகரசபைக்கு வரிசெலுத்துவதில்லை. இருந்தும் இக்கட்டட தொகுதி மிகவும் பழைமை வாய்ந்தது என உணரப்பட்டுள்ளதால் இதனை புனரமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்' என்றும் அவர் கூறினார். கடந்த, 1978ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 20ஆம் திகதி கட்டப்பட்ட இந்த கடைத்தொகுதிகள், பாவனைக்கு உதவாத வகையில் பழுதடைந்து காணப்படுகின்றன.
இரண்டு மாடிகளைக் கொண்ட இக்கடைத் தொகுதியின் முதலாம் மாடியில் 22இற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளபோதும் அவை கூரைகளற்ற நிலையிலே காணப்படுகின்றன. மழைக்காலங்களில் மழைநீர் வடிவதால் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
22 கடைகளில் தற்போது 5 கடைகளில் மட்டுமே வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏனைய கடைகளில் கூரைகள் மற்றும் மின்சாரம், தண்ணீர் பிரச்சினை நிலவுவதால் கடைகளை மூடியுள்ளதாக பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால், மேற்படி வியாபாரிகள் பிரதான வீதி ஓரங்களிலும் கடைத் தொகுதிகளுக்கு செல்லும் நுழைவாயிலின் இருபக்கங்களிலும் வியாபாரங்களை முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.
21 minute ago
37 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
37 minute ago
49 minute ago
52 minute ago