Kogilavani / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் கோரி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பில் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு பல தரப்பினரும் ஆதரவளித்துள்ளனர்.
அந்தவகையில் தலவாக்கலை பிரதேசத்துக்கு உட்பட்ட தலவாக்கலை, ட்றூட், பெயாவல்,கிறேட்வெஸ்டன், பாமஸ்டன், வட்டக்கொடை, மடக்கும்புற, ஹொலிரூட், லோகி, கூம்மூட்,சென்கிளையர் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், இன்று(5) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் நுவரெலியா, தலவாக்கலை, கொட்டக்கலை, நானுஓயா, டயகம, ராகல, வட்டக்கொடை போன்ற நகரங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் தங்களின் வர்த்தக நிலையங்களை மூடி இப்போராட்டத்துக்கு ஆதரவுத் தெரிவித்தனர்.
அத்துடன் தலவாக்கலை பிரதேச பாடசாலைகளில் சில பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. பாசடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை அறிவித்து இப்போராட்டத்தற்கு வலுசேர்க்கும் முகமாக ஆதரவு தெரிவித்திருந்தனர். அதேவேளை, தலவாக்கலை நகரில் தனியார் பஸ்கள், ஓட்டோ சாரதிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் இன்றைய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தலவாக்கலை லிந்துலை நகரசபைத் தலைவர் லெட்சுமன் பாரதிதாஸன் தெரிவித்துள்ளார்.



23 minute ago
31 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
52 minute ago