2026 மே 02, சனிக்கிழமை

தலவாக்கலை நகரிலுள்ள வியாபார நிலையங்களில் திடீர் சோதனை

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில்,  நுவரெலியா மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகள், இன்று (16) திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். 

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளை, பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு அளவீட்டின்போது மோசடி செய்யப்பட்டே  விநியோகிக்கப்படுவதாகவும்,  பொதி செய்யப்பட்ட பொருள்களின் நிறை சரியான அளவில் இல்லை என்றும் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையேடுத்தே இத் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அளவை, நிலுவை உபகரணங்கள் கண்காணிக்கப்பட்டதுடன்,  சீர்செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் வர்த்தகர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் குறிப்பிட்ட சில பொருட்களின் நிறைகள், பொதியில் குறிப்பிட்டது போல் இருக்காமையால், சில வர்த்தகர்கள் அதிகாரிகளால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

நுகர்வோர் சட்டதிட்டங்களையும், வணிக விழுமியங்களையும் பின்பற்றாத வர்த்தகர்களுக்கு எதிராக, இனிவரும் காலப்பகுதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .