Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}


ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன், எஸ்..கணேசன், எஸ்.சுஜிதா, டி.கௌசல்யா தலவாக்கலை- லிந்துலை நகரசபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு, தலவாக்கலை-லிந்துலை நகரசபையின் கேட்போர் கூடத்தில், இன்று (27) நடைபெற்றது.
நகரசபையின் தலைவராக, சுயேசைக் குழுவில் போட்டியிட்டு தெரிவான அசோக்க சேபாலவும் உப தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட லெச்சுமி பாரதிதாசனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு, திறந்தவெளி வாக்கெடுப்பாகவும் இரகசிய வாக்கெடுப்பாகவும் நடைபெறற்றது.
தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக ஏழு வாக்குகளைப் பெற்று அசோக்க சேபால, தலவாக்கலை-லிந்துலை நகரசபையின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, உபதலைவர் பதவிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் லெட்சுமன் பாரதிதாசனும் சுயேட்சைக் குழு இரண்டு சார்பில், தாளமுத்து சுதாகரனும் போட்டியிட்டனர்.
இதில், பாரதிதாசன் ஆறு வாக்குகளைப் பெற்று, உப தலைவர் பதவியை தனதாக்கிக் கொண்டார். தாளமுத்து சுதாகரன், நான்கு வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார்.
உப தலைவர் தெரிவின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், உப தலைவர் பதவிக்காக பாலமுரளி என்பவரின் பெயர் முன்மொழியப்பட்ட போதிலும், எவரும் அதை வழிமொழியாததன் காரணமாக, அவரது பெயர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago