Kogilavani / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை லிந்துலை நகரசபைக்குச் சொந்தமான தலவாக்கலை தெவிசிறிபுற ரத்னில்கல பிரதேசத்தில், ஒரு குழுவினர் அத்துமீறி காணியை சுவீகரித்ததால் அதனை விடுவிக்கக்கோரி, தலவாக்கலை நகர பொதுமக்கள், இன்று(11) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் குழுவினர் அத்துமீறி குடியேறியமை தொடர்பாக நகரசபைத் தலைவர் லெ.பாரதிதாசன், தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர்.
இது தொடர்பில், தலவாக்கலை லிந்துலை நகரசபைத் தலைவருடன் தொடர்புகொண்டு வினவியபோது, ரந்தனிகலப் பகுதியில், ஒரு குழுவினர் அத்துமீறி பலவந்தமாகக் காணியை சுவீகரித்து அங்கு தற்காலிகக் கூடாரங்களை அமைத்துள்ளனர் என்றும் குறித்த காணியை விடுவிக்ககோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
காணியை சுவீகரித்த குழுவினருடன் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தற்காலிகக் கூடாரங்களை உடனடியாக அப்புறப்படுத்தியதுடன் மேற்படிக் குழுவினரை அங்கிருந்து வெளியேற்றினர் என்றும் தெரிவித்தார்.


7 minute ago
12 minute ago
19 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
19 minute ago
23 minute ago