Freelancer / 2021 ஜூலை 31 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுஜித் சுரேன்
கொட்டகலை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை பகுதியில் நேற்று (30) கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
தலவாக்கலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஓய்வுபெற்ற பெண் அதிபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், கடுமையான சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் போது அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதாகவும் அதனால் அவருக்கு எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கொரோனா பிரிவிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தும் செயற்பாடு இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். R
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago