Editorial / 2025 ஜனவரி 21 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி மஹியங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் இவ்விபத்து, திங்கட்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.
கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து மாரக்ஷன உடுதெனிய பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், மயிலப்பிட்டி பகுதியிலிருந்து கண்டி பகுதியை நோக்கி சென்ற பாடசாலை சேவை பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் 18 வயது மதிக்கதக்க மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, தந்தை மற்றும் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ரிகலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, மேற்படி உயிரிழந்த யுவதியின் சடலம் மாரஸ்ஸன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே எதிரே வந்த பஸ்சுடன் மோதியதன் காரணமாக இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
எனினும் இவ்விபத்துக்கு காரணமாக இருந்த பஸ் சாரதியை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
50 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
4 hours ago