2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தவிசாளருக்கு தொற்று; சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன

R.Maheshwary   / 2021 ஜூலை 02 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

வலப்பனை பிரதேச சபை தவிசாளருக்கு நேற்று (1) மாலை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால்,  இன்று (02) காலை கூடவிருந்த மாதாந்த சபை அமர்வு தற்காலிகமாக  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வலப்பனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எச்.மடுகல்ல தெரிவித்தார். 

பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபையின் செயலாளர் ஆகியோருக்கு நேற்று  என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் அதற்கமைய, சபை தவிசாளருக்கு தொற்று உறுதியாகியுள்ள போதிலும் செயலாளருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X