R.Maheshwary / 2021 ஜூன் 24 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
கொட்டகலை சுகாதார வைத்தி அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த கர்ப்பிணி பிரசவித்த சிசு உயிரிழந்துள்ளதென, கொட்டகலை சுகாதார வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த கர்ப்பிணி தாய் லிந்துலை வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் பிரசவித்த சிசு நேற்று (23) உயிரிழந்துள்ளது. இதனையடுத்து தாயின் நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு என்டிஜன் பரிசோதனை செய்யபட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைடுத்து, உயிரிழந்த சிசுவுக்கு என்டிஜன் பரிசோதனை செய்யப்பட்ட போது, சிசுவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago