Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 24 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சன குமார
தம்புளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு நேற்று (23) அதிகாலை தொடக்கம் அதிகமான மரக்கறிகள் மற்றும் பழவகைகள் கிடைத்து வருவதாக தம்புளை பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகள் தெரிவித்தனர்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக குறித்த பொருளாதார மத்திய நிலையத்துக்கு குறைந்தளவு மரக்கறி தொகைகளே கிடைத்து வந்ததாகவும் தற்போது எரிபொருள் விநியோகத்தில் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையால், நாட்டின் வேறு பிரதேசங்களிலிருந்து தமது பொருளாதார மத்திய நிலையத்துக்கு கிடைக்கும் மரக்கறி தொகைகள் அதிகரித்துள்ளன என்றனர்.
அத்துடன் மரக்கறிகளின் விலைகளும் 30 தொடக்கம் 40 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் எரிபொருள் பிரச்சினை மேலும் குறைவடையுமானால் மரக்கறிகளின் விலைகள் மேலும் வீழ்ச்சியடையும் என தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .