Editorial / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோ கணேசன் ஆகியோரின் செயற்பாடுகளை எண்ணி, தாம் பெருமிதம் அடைவதாக, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டங்களின் போது, மலையக மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்வைப்பதே, அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோ கணேசன் ஆகியோரின் செயற்பாடுகளாகக் காணப்பட்டன என்று அவர் கூறினார்.
தமது அமைச்சினூடாக மேற்கொள்ளவிருக்கும் பணிகளைத் தவிர்த்து, ஏனைய அமைச்சுகளூடாகவும், மலையக மக்களுக்கு எவ்வாறு நன்மை செய்யலாம் என்று சிந்தித்து, ஏனைய அமைச்சர்களுடன் கலந்துரையாடி, அவர்களைத் தூண்டிவிடுவதும் இவர்களின் செயற்பாடுகளில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.
அந்த வகையிலேயே, மகாத்மா காந்திபுரம் மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு, தனது அமைச்சினூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .