Kogilavani / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உடனான பட்டியலில் தன்னையும் சேர்த்ததற்காக தான் பெருமையடுவதாகஇ தொழிலாளர் தேசிய முன்னணியின் அரசியல் உயர்பீடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள இராமன் செந்தூரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவதுஇ
'மலையக அரசியல் எழுச்சிக்காக எங்கள் குடும்பத்தையே தியாகம் செய்ய தயாரானவர்கள் நாங்கள். மலையக மக்கள் முன்னணி உருவான காலத்தில் எங்கள் குடும்பத்தின் வகிபாகம் பலரும் அறிந்தது. எனது இரண்டு சகோதரர்களும் அண்ணன் சந்திரசேகரனுடன் சிறைவாசம் அனுபவித்தவர்கள். அத்தகைய பின்னணியுடனேயே எனது அரசியல் பயணம் ஆரம்பமானது. அதனை சரியான திசையில் வழிநடத்திச் சென்ற அரசியாலாளர் எனது நண்பர் மயில்வாகனம் திலகராஜ். அவரது அணியில் என்னைச் சேர்த்து தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
'2009ஆம்ஆண்டு மாகாண சபை தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹங்குரங்கத்தை தொகுதி அமைப்பாளராக செயற்பட்டு சங்கத்தையும் கட்சியையும் அங்கு மீளக் கட்டமைக்கும் பொறுப்பை பொதுச் செயலாளர் எனக்கு வழங்கினார். அதனை திறம்பட செய்ததால் அரசியல் உயர்பீடத்துக்கும் கட்சியின் கொட்டகலை பிரதேச சபை பகுதி அமைப்பாளராகவும் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டேன்.
'ஒரே தடவை பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி மலையகப் மக்கள் பிரதிநிதி ஒருவர் எவ்வாறு செயற்பட வேண்டும் என செயற்பட்டுக் காட்டிய சாதனையாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் ஆள் எனும் பட்டியலில் என்னைச் சேர்த்தது எனக்கு மிகப் பெருமிதமான விடயமாகவே கருதுகிறேன். என்னை அவர்கள் நீக்கினார்கள் என்பதைவிட என்னை அவர்கள் சேர்த்த இடம் சிறந்தது என்பதால் அந்த முடிவை வரவேற்கின்றேன்' என்று மேலும் தெரிவித்துள்ளார்.
11 minute ago
12 minute ago
16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
16 minute ago
23 minute ago