R.Maheshwary / 2022 ஜனவரி 25 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
தனது நண்பருடன் மாத்தளை- சுதுகங்கைக்கு நீராடச் சென்ற 17 வயது இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நேற்று (24) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மாத்தளை- களுதாவளை பிரதேசத்தில் வர்ணபூச்சு வேலைக்குச் சென்றிருந்த குறித்த இளைஞன், அந்தப் பணிகள் நிறைவடைந்ததும் தனது நண்பருடன் சுதுகங்கைக்கு நீராட சென்று காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞன் மாத்தளை- உன்னஸ்கிரிய புதிய நாகல பகுதியைச் சேர்ந்த பிள்ளைநாதன் தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று (25) காலை வரை காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
37 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
37 minute ago
37 minute ago