2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிவீடுகள்

Kogilavani   / 2018 ஜூன் 15 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில், தீ விபத்தினால்  பாதிக்கப்பட்டுள்ள 12 குடும்பங்களுக்கு, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கு அமைவாக புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுமென, மத்திய மாகாணசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில்,  தோட்டக் குடியிருப்பொன்றில் 13ஆம் திகதி திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர்.

தற்போது இவர்கள் பெல்மோரல் தமிழ் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைப் பார்வையிடுவதற்காக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்,   பெல்மோரல் தோட்டத்துக்கு நேற்று (14)  விஜயம் செய்தார்.

இவருடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அக்கரப்பத்தனை பிரதேச முக்கியஸ்தர்களும் சென்றிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக உடுதுணிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் மத்திய மாகாணசபை உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில் :

“இந்தத் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு விரைவில் தனி வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு அமைச்சர் பழனி திகாம்பரம் உரிய தரப்பினருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்கும் வரையில் தற்காலிக கொட்டகைகளை அமைப்பதற்காக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக தகரங்களை வழங்கி வைப்பதற்கும் அமைச்சர் திகாம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆகவே பாதிக்கப்பட்டவர்களிடத்தில் எவ்வித பாரபட்சமுமின்றி நாம் உதவிகளை வழங்கவுள்ளோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X