Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்
லிந்துலை- பெயாபீல்ட் தோட்டத்தில், இன்று (14) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினால் வீடொன்று எரிந்து சாம்பராகியுள்ளது.
பிரதேச மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் எனினும் அவ்வீட்டில் வசித்து வந்த ஏழு பேர் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்த பெறுமதிமிக்க சொத்துகள் தீயில் எரிந்து சாம்பராகியூள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை, அப்பகுதிக்குப் பொறுப்பான கிராம அபிவிருத்தி உத்தியோகத்திரினூடாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago