2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தீபாவளி முற்பணம் ’தொழிலாளர்களை கடனாளிகளாக்கிவிடக்கூடாது’

Kogilavani   / 2020 நவம்பர் 03 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணம், அவர்களைக் கடனாளிகள் ஆக்காத வகையில் கழிக்கப்படுவதை தோட்ட நிர்வாகங்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று, சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், சம்பள உயர்வு உட்பட பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களுக்கான அனைத்துவிதமான கொடுப்பனவுகளும் நிவாரண உதவிகளும், அவர்களுக்கு மேலதிகச் சுமைகளை ஏற்படுத்துவதாகவே கடந்த காலங்களில் அமைந்தன என்றார்.  

'நிவாரணம் என்ற பெயரில் வழங்கப்பட்ட கொரோனா கால உணவுப் பொருள்களுக்கான தொகை, ஒரே முறையில் கழிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் பாரிய பொருளாதார சிரமங்களுக்கு முகம்கொடுத்தார்கள். தற்போதைய நிலையில் குறைந்த வேலை நாள்கள், போதிய ஊதியமின்மை, விலைவாசி அதிகரிப்பு, வெளியிடங்களில் தொழில்புரியும் குடும்ப உறுப்பினர்களின் வருமான பாதிப்பு போன்றவற்றால் தொழிலாளர்களின் பொருளாதார நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது. 

'எனவே, வழங்கப்படும் தீபாவளி முற்பணமும் குறிப்பிட்ட காலத்துக்குள் அதிக தவணையில் கழிக்கப்படுமானால் அது மேலதிக பொருளாதார சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும். நியாயமான முறையில் முற்பணம் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் ஏதாவது காரணங்களால் நாடு முடக்கப்படுமானால் அவர்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தடைகளின்றி கிடைக்க வழிசெய்ய வேண்டுமென்பதிலும், வழங்கப்படும் சகல பொருள்களும் நியாய விலையில் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் சம்பந்தப்பட்ட அனைவரும் அக்கறையோடு செயற்பட வேண்டும்' என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X