Janu / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் அதிகாரிகம பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ். சதீஸ்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .