2025 மே 19, திங்கட்கிழமை

தீயால் ரயிலன் தேயிலைத் தொழிற்சாலை முற்றாக எரிந்தது

R.Maheshwary   / 2022 ஜூலை 27 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயிலன் தோட்டத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் நேற்று (26)  இரவு 7.20 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலை  எரிந்து நாசமாகியுள்து.

தீயை அணைக்க புஸ்ஸலாவ பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்தனர்.

தீ வீபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன்,  மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இத் தீ விபத்து தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X