R.Tharaniya / 2025 ஜூலை 02 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்வும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன.
குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்வும், தேசிய மக்கள் சக்தி அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட இடங்களில் தேசிய மக்கள் சக்தியும் ஆட்சியமைக்கும் என்ற அடிப்படையில் இந்தப் புரிந்துணர்வு எட்டப்பட்டது.
குறிப்பாக நுவரெலியா மாநகர சபை, வலப்பனை, அங்குராகெத்த, தலவாக்கலை,ஹட்டன் டிக்கோயா நகரசபை, கொத்மலை ஆகிய இடங்களில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதாகவும், நுவரெலியா பிரதேச சபை,கொட்டகலை பிரதேச சபை, அக்கரப்பத்தன பிரதேச சபை, நோர்வுட் பிரதேச சபை ஆகிய இடங்களில் இ.தொ.கா ஆட்சி அமைப்பாகவும் புரிந்துணர்வு எட்டப்பட்டது.
இந்த நிலையில், நோர்வூட் பிரதேச சபையில் .இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிக ஆசனங்களை பெற்றிருந்தும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏனைய தரப்புடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
நோர்வூட் பிரதேச சபையில் போட்டியிட்ட ஏனைய கட்சிகளை விட அதிகமான வாக்குகளை பெற்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முதலிடத்தை பெற்றதனால், மக்கள் ஆணையை தேசிய மக்கள் சக்தி மதிப்பதாகவும், மக்கள் ஆணையை நிலைநாட்டுவதற்கான தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் இக்கலந்துரையாடலின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானிடம் தெரிவித்தனர்.
மேலும், விரைவில் நோர்வூட் பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். ஆட்சியமைக்கும்.‘‘ என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
2 minute ago
13 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
13 minute ago
1 hours ago
1 hours ago