2025 ஜூலை 23, புதன்கிழமை

தேக்கு மரக்குற்றிகளுடன் இருவர் கைது

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, அக்குறணையில் வைத்து, வானொன்றில் கொண்டுச் செல்லப்பட்ட தேக்குமரக் குற்றிகளுடன் இருவரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து 150,000 ரூபாய் பெறுமதியான 14 தேக்கு மரக்குற்றிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, தேக்கு மரக்குற்றிகளை கொண்டுச் செல்வதற்காக பயன்படுத்திய வானையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அக்குறணையைச் சேர்ந்த இருவரே, ஞாயிற்றுக்கிழமை மாலை இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரும் மஹியங்கனையிலிருந்து கண்டி, அக்குறணைக்கு தேக்குமரக் குற்றிகளைக் கொண்டுவந்ததாகவும், இவ்விருவரும் நீண்டகாலமாக தேக்குமர விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .