Editorial / 2019 மே 07 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் பதுளைக் கிளைத் தலைவரான சாகுல் ஹமீட் மொஹமட் என்பவரை, பதுளை பொலிஸார், நேற்று முன்தினம் (6) கைதுசெய்துள்ளனர்.
பதுளைப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, பதுளை புறநகர்ப் பகுதியிலுள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்துச் சோதனை செய்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் குறித்த நபரையும் கைதுசெய்துள்ளனர்.
மேலும் அந்நபரின் வீட்டிலிருந்து, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவரின் உரை, அமைப்பின் விரிவுரைகள் அடங்கிய 276 இறுவட்டுகளையும் மேற்படி அமைப்பின் துண்டுப்பிரசுரங்கள் பலவற்றையும் இந்து, பௌத்தம், கிறிஸ்தவ சஞ்சிகைகள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இவர் கைதுசெய்யப்படும்போது, ஆவணங்கள் பலவற்றைத் தீயிட்டுக் கொழுத்திக் கொண்டிருந்ததாகவும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் உத்தரவுக்கு அமையவே, ஆவணங்கள் பலவற்றை எரித்ததாக அந்நபர் விசாரணைகளின்போது தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago