2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

தேசியப் பட்டியலிலிருந்து நீக்கியமை அநீதியாகும்

Ilango Bharathy   / 2021 ஜூன் 13 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நீலமேகம் பிரசாந்த்

நல்லாட்சி அரசாங்கத்தின் போது மஸ்கெலியா பகுதியில் மஸ்கெலியா சென்ஜோசப் பாடசாலை,கவரவல பாடசாலை,ப்ளூம்பீல்ட் பாடசாலை உட்பட ஹட்டன் சென்.பொஸ்கோ பாடசாலையை தேசிய பாடசாலையாக்க பட்டியலிட்டு அனுப்பினோம் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன்,ஆட்சிமாறியதும் அதை முறையாக நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் இப்போது தேசிய கல்லூரி என அறிவிக்கப்பட்டு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை பாரிய அநீதியாகும் என்றார்.

மஸ்கெலியா சென்ஜோசப் பாடசாலையை தேசிய பாடசாலை பட்டியலில் இருந்து நீக்கியமை தொடர்பில் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரி வருடாவருடம் கல்வியற் கல்லூரி,பல்கலைக்கழகம் என பல மாணவர்களை அனுப்புகிறது எனவே மஸ்கெலியா பாடசாலையை மீண்டும் தேசிய பாடசாலையாக அறிவிக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

நல்லாட்சி காலத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடாக ஒவ்வொரு பாடசாலையிலும் இணைய வழி மூலம் கல்வியை தொடர்வதற்கு கணிணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென தெரிவித்த, அவர், ரணில் அன்றே தீர்க்க தரிசனத்துடன் எதிர்காலத்தை சிந்தித்து திட்டங்களை வகுத்தவர் என்றார்.

நல்லாட்சி அரசாங்கம் மாற்றப்பட்டதும் அத்திட்டத்தை செற்படுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் தற்போது இணையவழி கல்வியே மாணவர்களுக்கு தேவைப்படுகின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .