Editorial / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நதீக பண்டார
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், நாட்டின் தேசியப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென அரசாங்கம் கூறினாலும், ஆயுதங்களுடனான சந்தேக நபர்கள், தினமும் கைது செய்யப்படுவதால், தேசியப் பாதுகாப்புக் குறித்து மீண்டும் அவதானம் செலுத்த வேண்டியது அவசியம் என, கண்டி மல்வத்த பீடத்தின் அநுநாயக்க தேரர், திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
30 வருட யுத்தத்தால், நாடு பெரும் இழப்புகளை எதிர்கொண்டது என்றும் அதன் பின்னரும் திகனைக் கலவரம், ஈஸ்டர் தாக்குதல் என்பன நிகழ்ந்ததால் மக்கள் பெரும் அச்சமான சூழலில் உள்ளனர் என்றும் கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வைத்தியர் வழங்கிய தகவல்களுக்கு அமையவே, வடக்கிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டன என்றும் வடக்கில் குளங்களைச் சுத்தம் செய்யும் போதும் ஆயுதங்கள் கிடைக்கின்றன என்றும் கூறினார்.
பாதுகாப்பற்ற நிலைமை, நாடு முழுவதும் வியாபித்துள்ளதாகக் கூறிய அவர், புதிய இராணுவத் தளபதியின் நியமனத்துக்கு, அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவிப்பதையும் வடக்கிலுள்ள சில தமிழர்கள் எதிர்ப்பு வெளியிடுவதையும் ஏற்றுகொள்ள முடியாதென்றும் மேலும் கூறினார்.
அதனால், நிதித் தேவைக்காக மற்றைய நாடுகளிலிடத்தில் இலங்கையை அடகு வைக்க வேண்டாம் என்றும் புலம் பெயர் அமைப்புகளுக்கு அஞ்சாமல், தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
40 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
9 hours ago
02 May 2026