2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தேயிலை செடிகளுக்கு இடும் உரம் களவு

Janu   / 2023 ஜூன் 18 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் உள்ள டீசைட் பிரிவில் களஞ்சிய சாலையில் வைக்க பட்டு இருந்த ஒரு கிலோ 6500/= ரூபாய் பெறுமதியான 21 கிலோ எடை கொண்ட பொதி ஒன்று காணமல்போனது தொடர்பாக தோட்ட முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளர்

மஸ்கெலியா  பொலிஸார் மேற்கொண்ட புலன் விசாரணையை தொடர்ந்து அதே தோட்டத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரை சனிக்கிழமை (17)  கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவரால் விற்பனை செய்ய பட்ட 3கிலோ  500  கிரேம் உரம் சிக்கியது.

குறிப்பிட்ட சந்தேக நபரை  ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்டதாகவும் பதில் நீதவான் சந்தேக நபரை எதிர் வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாகவும் மஸ்கெலியா  பொலிஸார் தெரிவித்தனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X