R.Maheshwary / 2022 ஜூலை 24 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, கடியலென ஆற்று பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
இதன்போது படுகாயமடைந்த லொறியின் சாரதி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து நேற்று (24) இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக அந்த தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
கெட்டபுலா ஜகடியலென தோட்டப் பகுதியில் இருந்து கெட்டபுலா தோட்டத்திற்கு தேயிலை கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி தேயிலை கொழுந்துடன் விபத்துக்குள்ளானதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியில் திடீரென தடுப்புக்கட்டை (பிரேக்) செயழிழந்ததன் காரணமாக பின்னோக்கி வந்து கொத்மலை நீர்தேகத்திற்கு நீர் வழங்கும் கடியலென ஆற்றுப்பகுதியில் இவ்வாறு குடைசாய்ந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago