2025 ஜூலை 16, புதன்கிழமை

’’தேயிலைச் சாயம்’’ கண்காட்சி

Janu   / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

"தேயிலைச் சாயம்" எனும் தொனிப் பொருளிலான புகைப்படக் கண்காட்சியொன்று மாத்தளை சர்வதேச காந்தி நினைவு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (11), சனிக்கிழமை (12)  ஆகிய  இரண்டு தினங்கள் காலை 9.00 மணி முதல் 6.00 மணிவரை நடைபெறவுள்ளது

மாற்றுக் கொள்கைக்கான நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் இந்நிலைய முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்

சுவையான தேநீர்க் கோப்பையில் மூழ்கிக் கிடக்கும் மலையக சமூகத்தின் வாழ்க்கை வரலாறு கடந்த சில வருடங்களாக  " தேயிலைச் சாயம்" எனும் பெயரில் புகைப்படக் கண்காட்சிகள் நாட்டின் பல இடங்களில் நடாத்தப்பட்டுவரும் நிலையில் மலையகம் சமூகம் இலங்கைக்கு வந்து 200ஆண்டுகள் நிறைவு கூருமுகமாக இக்கண்காட்சி நடாத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .