Freelancer / 2023 ஏப்ரல் 05 , பி.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவா ஸ்ரீதரராவ்

இலங்கைக்கு மலையக மக்கள் வருகை தந்து இருநூறு வருட பூர்த்தியை முன்னிட்டு இரத்தினபுரி கலை கேந்திர மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தேயிலைச் சாயம்" எனும் தொனிப்பொருளில் புகைப்படக் கண்காட்சி இரத்தினபுரி லெல்லுபிட்டிய சில்வரே ஹோட்டல் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மூன்று தினங்கள் நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சி, இன்றும் (06) நடைபெறும்.
ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மத குருமார்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் மஞ்சுளா இதிகாவெல, GIZ நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் நிகலஸ் லம்பாவா மற்றும் பாடசாலை மாணவர்கள், அதிபர் ஆசிரியர்கள், சட்டத்தரணிகள் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
37 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
43 minute ago
52 minute ago