2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

தேயிலைத் தளிர்களை விற்க முயன்ற தொழிலாளி கைது

Gavitha   / 2020 நவம்பர் 24 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

கொஸ்லந்தைப் பகுதியின் ஹபரகலை பெருந்தோட்டத்தில், தேயிலைகளை பறித்து அவற்றை விற்பனை செய்ய முயன்ற தொழிலாளியொருவரை, கொஸ்லாந்தை பொலிஸார் இன்று (24) கைது செய்துள்ளனர்.

இவர், தனியார் ஒருவருக்கு இந்தத் தேயிலைத் தளிர்களை விற்பனை செய்ய முயன்றதாகவும் இது தொடர்பாக தெரியவந்தவுடன், சம்பவ இடத்துக்கு வந்த தோட்ட முகாமையாளர், கொஸ்லாந்தை பொலிஸாருக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளார். இதன்பின்னரே, இவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், குறித்த தொழிலாளியிடம் இருந்து, 29 கிலோகிராம் தேயிலைத் தளிர்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X