2026 ஜனவரி 21, புதன்கிழமை

தேயிலைத் தூளில் கலப்படம்; தொழிற்சாலைக்குப் பூட்டு

Ilango Bharathy   / 2021 ஜூலை 29 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

மத்துரட்ட பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இராகலை தோட்ட தேயிலை
தொழிற்சாலையில், தேயிலை தூளில் கலப்படம் செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதால்,
குறித்த தொழிற்சாலை இம் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் மூடப்பட்டுள்ளது.

தேயிலைத் தூளில் கலப்படம் செய்யப்பட்டதை, தொழிற்சாலையிலுள்ள பாதுகாப்பு கமெராவின் உதவியுடன், தேயிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து, இத் தொழிற்சாலையின் பணிகள் 4 மாதத்துக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், இதனால் 60 தொழிலாளர்கள் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர்.

மேலும் இத்தோட்டத்தில் பறிக்கப்படும் கொழுந்து இராகலை சூரியக்காந்தி தோட்டத்துக்குக்
கொண்டு செல்லப்படுகின்றது.

எனவே , நிரந்தரமாக இத்தொழிற்சாலையை மூட வேண்டாம் என தொழிலாளர்கள் கோரிக்கை
விடுத்துள்ள நிலையில், தொழிற்சாலையை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தோட்ட அதிகாரி ஆர்னல்ட் உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X