2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தேயிலைத் தொழிற்சாலை தீயால் ரூ.80 இலட்சம் நட்டம்

Kogilavani   / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ, ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி, பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுகங்தொட்ட தேயிலைத் தொழிற்சாலையில், நேற்று (28) ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக சுமார் 80 இலட்சம் ரூபாய்

நட்டம் ஏற்பட்டுள்ளதாக, தொழிற்சாலையின் உரிமையாளர் தெரிவித்தார்.

தீப்பரவலை தொழிற்சாலை ஊழியர்களும் பொதுமக்களும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும்  உற்பத்திக்குத் தயாராகவிருந்த பெருந்தொகையிலான தேயிலைக் கொழுந்துகள் மற்றும் தேயிலைத் தூள் என்பன தீக்கிரையாகியுள்ளன. 

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்த பலாங்கொடை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X