Kogilavani / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாத்
தேயிலைத் தோட்டங்கள் இருந்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் அல்ல இரண்டாயிரம் ரூபாயையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்த அகில இலங்கை மக்கள் முன்னேற்ற முன்னணியின் நிதிச்செயலாளர் ராஜ் பிரசாத் எனவே, தேயிலைத் தொழிற்றுறையை அழிவிலிருந்துக் காப்பாற்ற முன்வருமாறு சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், மலையகத்தில் தற்போது தேயிலைத் துறை அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்றும் பல தோட்டங்கள் காடுகளாக மாறிவிட்டன என்றும் தெரிவித்தார்.
மலையகத்தில் ஒவ்வோர் ஊரிலும் ஐம்பது ஏக்கராகக் காணப்பட்ட தேயிலை நிலங்கள் தற்போது 30 ஏக்கர் என்றளவில் குறைந்துவிட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேயிலை நிலங்கள் காடுகளாக மாறி வருவதால், சிறுத்தைகள், பாம்புகள் மக்களின் வாழ்விடங்களுக்குப் படையெடுக்கின்றன என்றும் தொழிலாளர்களுக்கு சம்பளமாக ஆயிரம் ரூபாய் அல்ல இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பதற்கு முதலில் தேயிலைத் தோட்டங்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எனவே முதலில் தேயிலைத் தொழிற்றுறையை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துளளார்.
9 minute ago
10 minute ago
14 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
14 minute ago
21 minute ago